New J1818 Magnetar Star
புதிய J1818 Magnetar நட்சத்திரம்
விஞ்ஞானிகள் போன வருடம் March மாதம் ஒரு வித்தியாசமான magnetar நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த வித்தியாசமான magnetar நட்சத்திரம் நாம் இதுவரைக்கும் கண்டுபிடித்து magnetar நட்சத்திரங்களை விட குறைந்த வயதுடையது. மேலும் இது ஒரு pulsar நட்சத்திரம் மாதிரியும் செயல்படுகிறது. இது நமது சூரியனை விட பல மடங்கு அதிக எடை உடையது.
ஒரு நட்சத்திரம் அதோட வாழ்நாள் முடிவுல அதன் எரிபொருள் குறைந்தவுடன் ஒரு சூப்பர் நோவா வெடிக்கும். இந்த சூப்பர் நோவா வெடிப்புகள் மூலமாகத்தான் நியூட்ரான் நட்சத்திரங்கள் உருவாக்குகின்றது.
இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் ஒரு வகை தான் magnetar நட்சத்திரம். நம்ப Universe-ல் நாம இதுவரைக்கும் பார்த்ததில் ரொம்ப சக்தி வாய்ந்த magnetic field இருப்பது magnetar நட்சத்திரம் தான். இந்த magnetic field நம்ப பூமியோட magnetic field விட பல லட்சம் கோடி மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
மார்ச் 12 2020 அன்று NASA Neil Gehrels Swift Observatory மூலம் ஒரு புதிய magnetar கண்டுபிடித்தார். இது நாம் கண்டுபிடித்த 31-வது magnetar நட்சத்திரம், இது நாம் இதுவரைக்கும் கண்டுபிடித்த 3000 நியூட்ரான் நட்சத்திரங்களில் ஒன்று ஆகும்.
J1818 என்ற இந்த magnetar நட்சத்திரம் ரொம்ப வித்தியாசமானது, நாம இதுவரைக்கும் கண்டுபிடித்த magnetar நட்சத்திரங்களின் இதுதான் ரொம்ப குறைந்த எடையுடைய magnetar.
![]() |
J1818 |
இது உருவாகி 500 வருடங்கள் மட்டுமே ஆகிறது. இதோட வயதை கணிக்க விஞ்ஞானிகள் இதோட சுற்றும் வேகம் எவ்வளவு வேகமாக குறைகின்றது என்ற தகவலை பயன்படுத்துவார்கள். இதுவரைக்கும் கண்டுபிடித்த magnetar நட்சத்திரங்களின், இதுதான் வேகமாகச் சுற்றும் magnetar நட்சத்திரம்.
இது ஒவ்வொரு 1.4 நொடிக்கும் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிவிடும். இது இவ்வளவு வேகத்தில் சுற்றுவதால் ரேடியோ wave-களை வெளியிடுகின்றது மேலும் ஒரு பல்சார் நட்சத்திரம் போல நடந்துகொள்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
J1818 என்ற இந்த magnetar நட்சத்திரம் நம்ப பூமியிலிருந்து சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த magnetar நட்சத்திர உருவாக காரணமாயிருந்த சூப்பர்நோவா ஒரு மிகப்பெரிய தூசி புகையை வெளியிட்டு இருக்கும். இந்த தூசி புகை தான் விஞ்ஞானிகள் இப்போது தேடிக்கொண்டு உள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் J1818 ரொம்ப வேகமாக சுற்றுவதால், இது உருவான இடத்திலிருந்து ரொம்ப வேகமாக நகர்ந்து வந்து இருக்கலாம். இது போன்ற சூப்பர் நோவா பற்றிய ஆராய்ச்சி மூலமா நம்ப சூரியனுடைய எதிர்காலத்தைப் பற்றி நாம் நிறைய புரிஞ்சுக்க முடியும்.
0 Comments